Accounting

Economics

Wednesday, May 12, 2010

வணிகக்கல்வி முன்னோடிப்பரீட்சை– 2010

சென்மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை

ஆசிரியர் க.பிரபாகர் B.A , Dip In Econ, Dip In Teach(Merit)
நேரம் - 2 மணித்தியாலம்

பகுதி – I

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

1. பங்குச்சந்தையில் கைமாற்றல் தொடர்பான பிணை வகை அல்லாதது.
1. சாதாரண பங்குகள்
2. வாக்குரிமையற்ற பங்குகள்
3. பங்கு ஆணைப்பத்திரம
4. கம்பனி தொகுதிக்கடன்
5. திறைசேரி உண்டியல்கள்

2. ரெலர் அட்டையின் தொழிற்பாட்டை கடன் அட்டை மூலம் மேற்கொள்ளலாம் அது
1. கடனுக்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்
2. வங்கி மீதியை அறியலாம்
3. தன்னியக்க பொறி மூலம் குறிப்பிட்டளவு பணத்தைப் பெறலாம்
4. மேற்கூறிய யாவும் சரியானது
5. மேற்கூரிய யாவும் பிழை

3. பணத்தின் வருவிக்கப்பட்ட தொழிற்பாடாகக் கருதக்கூடியது
1. பண்டமாற்றூடகமாகவும் பெறுமான அளவுகோலாகவும்
2 .பெறுமான அளவுகோலாகவும் பிற்போடப்பட்ட கொடுப்பனவு சாதனமாகவும்
3 பிற்போடப்பட்ட கொடுப்பனவு சாதனமாகவும் பெறுமானத்திரட்டாகவும்
4. பெறுமானத்திரட்டாகவும் பண்டமாற்றூடகமாகவும்
5. பெறுமான அளவுகோலாகவும் பெறுமானத்திரட்டாகவும்

4. பங்குச்சந்தையில் இரண்டாந்தரப் பட்டியலில் பொதுக்கம்பனிகள் தங்கள் பெயர்களைப் பட்டியற்படுத்திக் கொள்வதற்கு வழங்கிய மூலதனமாக கொண்டிருக்க வேண்டிய தொகை
1. 75 மில்லியன்
2. 75 பில்லியன்
3. 50 மில்லியன்
4. 50 பில்லியன்
5. 5 மில்லியன்

5. பணச்சந்தையில் அங்கத்துவம் வகிக்கும் அமைப்பு அல்லாதது
1. திறைசேரி உண்டியல் சந்தை
2. கரைகடந்த வங்கிச் சந்தை
3. வங்கிகளுக்கிடையிலான அழைப்புக்கடன் சந்தை
4. அக அந்நிய நாணயச் சந்தை
5. அலகுப் பொறுப்பாட்சி நிறுவனங்கள்

6. காசோலை ஒன்றிலுள்ள குறுக்குக் கோடுகளை நீக்கும் அதிகாரமுடையவர் 1. காசேலையைப் பிறப்பித்தவர்
2. காசோலையை தன்வசம் வைத்திருப்பவர்
3. காசோலையை கைமாற்றம் செய்பவர்
4. காசோலையை வைப்புச் செய்யும் வங்கி
5 .எவருமில்லை

7. காசோலை தொடர்பில் தவறான கூற்று பின்வருவனவற்றுள்
1. காவியின் காசோலைக்கு புறக்குறிப்பிடல் வசியம்
2. கட்டளைக் காசோலையை கரும பீடத்தில் மாற்றலாம்.
3. சிறப்புக் குறுக்குக் கோடிட்ட காசோலையை குறித்த வங்கியில் கருமபீடத்தில் நேரடியாகப் பணமாக்கலாம்.
4. கைமாற்றத்தாகாதது என குறுக்குக் கோடிட்ட காசோலையை இன்னொருவருக்கு கைமாற்றிக் கொடுக்கலாம்.
5. காசோலையில் பெறுனர் குறுக்குக் கோடிடலாம்.

8. வணிக முயற்;சியாளருக்கு ஆலேசனை சேவைகளை வழங்குவதற்கென செயல்படும் விஷேட நிறுவன அமைப்பு
1. வர்த்தக வங்கி
2. வியாபார வங்கி
3. அபிவிருத்தி வங்கி
4. நிதிக்கம்பனி
5. பணத்தரகுக் கம்பனி

9. கடனட்டை தொடர்பில் பிழையான கூற்று
1. கடனனட்டை பெறுவதற்கு நிலையான வருமானம் காட்டப்பட்ல் வுணே;டும்.
2. கடனட்டையைப் பயன்படுத்தி டெலர் இயந்திரம் மூலம் பணத்தைப் பெறலாம்.
3. கடனட்டை கொள்வனவுக்கு குறிப்பிட்ட காலம் வரையும் வட்டி அறவிடப்படமாட்டாது.
4. கடனட்டையைப் பெறுவதற்கு பிணை காட்டப்படல் வேண்டும்.
5. கடனட்டைகள் உள்நாட்டிலும் வெளநாட்டிலும் பயன்படுத்தலாம்.

10. தற்போது புழக்கத்திலுள்ள நாணங்கள்
1. நியம நாணயம்
2. அடையாள நாணயம்
3. போலி நாணயம்
4. அண்மிய பணம்
5. வங்கிப் பணம்

11. மத்திய வங்கியின் பண்பியல் சார் கட்டுப்பாடு ஒன்றாக கருதக்கூடியது
1. பகிரங்க சந்தை நடவடிக்கை
2. ஒதுக்குவீதத்தை நிர்ணயித்தல்
3. வங்கி விPதத்தை நிர்ணயித்தல்
4. பொருளாதார நிலைமைகளைச் சுட்டிக்காட்டி ஒத்துழைக்கச் செய்தல்
5. மேலுள்ள எவையுமல்ல

12. வியாபார வங்கியால் வழங்கப்படும் சேவையாவது
1.. நடைமுறைக் கணக்கு தவிரந்த ஏனைய கணக்குகளைப் பேணல்
2.. நீண்டகாலக் கடன்களை வழங்குதல்
3. குத்தகைத் தொழிற்பாட்டில் ஈடுகடல்
4.. நடைமுறைக் கணக்குகளைப் பேணுதல்
5. ரெலர் வங்கிச் சேவை
13. பின்வருவனவற்றுள் பதிலீட்டுப் பணமாகக் கருதக்கூடியது
1. கடனட்டை
2. திறைசேரி உண்டியல்
3. கேள்வி வைப்புக்கள்
4. மாற்றுண்டியல்
5. திறைசேரிப் பிணை

14. பின்வருவனவற்றுள் பண்தின் பண்பு அல்லதது
1. மாற்றூடகம்
2. நீணடகாலப் பாவனை
3. பிரிபடும் தன்மை
4. இனங்காணும் தன்மை
5. சுமக்கும் தன்மை

15. நம்பிக்கை அலகுகளின் சந்தை விலையைத் தீர்மானிப்பது
1. முகாமைக் கம்பனி
2. மத்திய வங்கி
3. நம்பிக்கைப் பொறுப்பாளர்
4. பங்குச்சந்தை
5. அலகுடமையாளர்

இடைவெளிகளை நிரப்புக.
16. பொதுமக்கள் திறைசேரி உண்டியல்களை யாரிடம் கொள்வனவு செய்யலாம்……………………………………………………………………………….
17. காசோலையின் காந்த மை நிரலில் காணப்படும் இலக்கங்களை ஒழுங்குமுறையில் குறிப்பிடுக.…………………………………………… ………………………………….…………………………………………… ………………………………….
18. எத்தகைய காசோலைகளை பிறருக்கு சாட்டுதல் செய்ய முடியாது……………………………………………………………………………….
19. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்கள் யார்?…………………………………………… ………………………………….……………………………………………
20. கொழும்பு பங்குச்சந்தையின் கணிப்பிடப்படும் இரண்டு விலைச்சுட்டெண்கள் …………………………………………… ………………………………….
பகுதி – II

நீர் விரும்பிய 20 வினாக்களுக்கு மாத்திரம் விடை தருக.

01. பணத்தின் தொழிற்பாடுகள் யாவை?
02. அண்மிய பணம் என்றால் என்ன?
03. கடனட்டையைப் பயன்படுத்துவதால் வியாபரிக்கும் கடனட்டை உரிமையாளருக்கும் கிடைக்கும் நன்மைகளைத் தனியத்தனியாகக் குறிப்பிடுக?
04. திறந்த காசோலை வெற்றுக்காசோலை வேறுபடுத்துக.
05. ஒருவருடைய ரெலர் அட்டையை இன்னொருவர் பயன்படுத்த முடியாதது ஏன்?
06. காசோலையைப் பிறப்பிக்கும் பொழுது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் 6 தருக?
07. இலத்திரனியல் வரவட்டை என்றால் என்ன?
08. கடனட்டைக்கும் வரவட்டைக்கும் இடையிலான மூன்று வேறுபாடுகள் தருக?
09. மத்திய வங்கியின் அடிப்படைக்குறிக்கோள்கள் இரண்டினையும் குறிப்பிட்டு அவற்றினை சுருக்கமாக விளக்குக?
10. பிரதி பிப்ம் காசோலை தீர்ப்பனவு முறையின் அனுகூலங்கள் மூன்று தருக?
11. மறு கொள்வனவு வீதம் - நேர்மாற்று மறுக் கொள்வனவு வீதம் விளக்குக.
12. நிரந்தர மேலதிகப் பற்று – தற்காலிக மேலதிகப் பற்று வேறுபடுத்துக.
13. தொலைபேசி வங்கிச் சேவை என்றால் என்ன?
14. உரிமம் பெற்ற விஷேட வங்கி என்றால் என்ன? உதாரணம் இரண்டு தருக?15. வங்கியல்லா நிதி நிறுவனங்கள் என்றால் என்ன? உதாரணம் இரண்டு குறிப்பிடுக.
16. நிதிக் குத்தகை – செயலாற்றுக் குத்தைக வேறுபடுத்துக.
17. அலகுப் பொறுப்பாட்சி நிறுவனங்கள் எவை? அவற்றின் வகைகள் எவை?
18. முதல் நிலை வணிகர்கள் என்றால் என்ன?

No comments:

Post a Comment