Accounting

Economics

Monday, May 10, 2010

க.பொத.உயர்தர மாதிரிப்பரீட்சை –2010 பொருளியல் கேள்வி,நிரம்பல் கோட்பாடு நேரம் :- 1 மணித்தியாலம்
ஆசிரியர்:- க.பிரபாகர் M.A (Economics) – Final, University of Peradeniya
எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

01. பின்வரும் எண்ணக்கருக்களை வரையறுக்க.
01. கேள்வி
02. புறநடைக்கேள்வி
03. கேள்வித்தொழிற்பாடு
02. கேள்வியை ஏற்படுத்தும் காரணிகள் எவை?03. கேள்வியை நிர்ணயிக்கும் காரணிகள் 5 எழுதுக?
04. கேள்விமாற்றம், கேள்வித்தொகை மாற்றம் என்பவைகளை விளக்கி அவற்றின் பிரிவுகளையும் வரைபடம்மூலம் காட்டி விளக்குக.
05. பின்வரும் கேள்வி வகைகளை விளக்குக.
01. நேர்க்கேள்வி
02. வழிவந்த கேள்வி
03. போட்டிக்கேள்வி
06. பின்வரும் சார்புகள் மூலம் விளக்கப்படுவது என்ன? அவை ஒவ்வொன்றுக்குமான எடுகோள்களையும் தருக?
1.QdX=f(pX) 2. Qdn=f(Y) 3. Qdn=f(G)
4. Qdx=f(T) 5. Qdy=f(px1..xn)
07. பின்வருவனவற்றிற்கு கேள்விச் சமன்பாட்டை அமைக்க?
1. விலை 5 ரூபாவில் கேள்வித்தொகை 300 அலகுகள் விலை 10
ரூபாவில் கேள்வித்தொகை 200 அலகுகள்
2. 400 அலகு கேள்வித்தொகை 20 ரூபாவிலையிலும் 375 அலகுகள்
கேள்வித்தொகை 30 ரூபா விலையிலும் கேட்கப்படுகின்றன.
3. ஓர் அலகின் விலை 6 ரூபாயாக உள்ளபோது ஒரு பண்டத்தின் கேள்வி
பூச்சியமாகும் என்றும் ஓர் அலகின் விலை ஒவ்வொரு ரூபாயாகக்
குறைய அதற்கான கேள்வி 5 அலகுகள் வீதம் அதிகரிக்கும் என்றும்
விலை பூச்சியமாக இருக்கும்போது கேள்வித்தொகை 30 அலகுகள்
என்றும் கருதுக. இத்தரவுக்கான கேள்விச்சமன்பாட்டை அமைக்க.
08. நுகர்வோர் மிகை என்றால் என்ன? மேலே வினா 7 (ஐ) இன்படி பின்வரும் விலைகளில் நுகர்வோர் மிகையைக் காண்க?
1. ரூபா 10 2. ரூபா 12 3. ரூபா 13
09. சந்தையில் A,B,C ஆகிய மூன்று நபர்கள் மட்டுமே உள்ளனர்.
A யின் கேள்விச்சமன்பாடு Qd=200-12p
B யின் கேள்விச்சமன்பாடு Qd=150-10p
C யின் கேள்விச்சமன்பாடு Qd=100-8p எனின்
1. சந்தைக்கேள்விச் சமன்பாடு என்ன?
2. Aயின் கேள்விவளையி கிடையச்சை வெட்டும் புள்ளி என்ன?
3. சந்தைக் கேள்விவளையி கிடையச்சை வெட்டும் புள்ளி என்ன?
4. சந்தைக்கேள்வி வளையியின் சரிவு யாது?
10. பின்வருவனவற்றிற்கு விரவிலக்கணம் தருக?
1. நிரம்பல் 2. நிரம்பல்விதி 3. நிரம்பல்தொழிற்பாடு
11. சந்தையில் குறித்த பண்டத்தின் நிரம்பலை நிர்ணயிக்கும் காரணிகள்
எவை?
12. வழங்கல்மாற்றம்,வழங்கல்தொகைமாற்றம் என்பவற்றை வரைபடம்
மூலம் விளக்குக?
13. சிகரட்டுக்கான சந்தை வழங்கல்கோடு இடப்பக்கம் நகர்ந்துள்ளது எனக்
கருதுக எக்காரணிகள் இந்நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் என
விளக்குக.
14. வருமான விளைவு, பதிலீட்டு விளைவு என்பவைகளை விளக்குக?
15. புறநடை நிரம்பல் என்றால் என்ன? எத்தகைய சூழ்நிலையில் இது
நிகழலாம்.
16. உற்பத்தியாளர் உயரி என்றால் என்ன? பின்வரும் தரவுக்கு உயரியை
மதிப்பிடுக.
விலை 10 20
நிரம்பல் 200 300
(1) 15 ரூபா விலையில்; உயரி எவ்வளவு?
(2) 20 ரூபா விலையில்; உயரி எவ்வளவு?

(ஒவ்வொரு வினாவுக்கும் 5 புள்ளிகள் வீதம் மொத்தம் 80 புள்ளிகள்)
இடைவெளிகளை நிரப்புக
17. ஒரு பண்டத்தின் விலைக்கும் அதன் கேள்வித்தொகைக்கும் இடையில் ...................... தொடர்பு காணப்படுகிறது. ஆயினும் கிபன் பண்டமாயின் ......................... தொடர்பாக அமையும்.
18. கேள்விவிதி என்பது ..................... க்கும் ..................................... க்கும் இடையிலான ...................................... தொடர்பாக அமையும்.
19. வருமானம் அதிகரிக்க இழிவுப்பண்டத்தின் கேள்வித்தொகை ........................................
20. ஏனைய காரணிகள் மாறாதபோது விலையில் ஏற்படும் மாற்றத்தால் கேள்வித் தொகையில் ஏற்படும் மாற்றத்தை புலப்படுத்துவது ..................................... எனப்படும்.
21. X இன்விலை அதிகரிக்க Y இன் கேள்வி வீழ்ச்சியுறும் Z இன் கேள்வி அதிகரிக்கும் O வின் கேள்வி மாறாது ஆகவே.
1. X வும் Y யும் ........................................ பண்டங்கள்
2. X வும் Z வும் ........................................ பண்டங்கள்
3. X வும் O வும் ........................................ பண்டங்கள்
22. நிரம்பல் விதியின் படி பண்டமொன்றின் விலைக்கும் நிரம்பல் தொகைக்கும் இடையில் ................................. தொடர்பு காணப்படும் இதற்குக் காரணம் ....................................... ஆகும்.
23. நிரம்பல் வளையி ........................................... மாக ............................................ நோக்கி சரிந்து செல்லும்.
24. நிரம்பல் கணியமாற்றம் வளைகோட்டின் ...................................... மூலம் விளக்கலாம்.
25. நிரம்பல் சமன்பாட்டில் ய என்பது ........................................ஐயும் டி என்பது .............................. ஐயும் குறிக்கும்
26. ஆடைகளுக்கான நிரமபல்க்கோட்டை இடம்பெயர்கக்கும் நேர்க்காரணிகளில் ஒன்று
01. நுகர்வோர் வருமான அதிகரிப்பு
02. மூலப்பொருட்களின் இறக்குமதித் தீர்வைகுறைப்பு
03. விளம்பரநடவடிக்கையில்வெற்றி
04. ஆடைகளின் விற்பனை விலை அதிகரிப்பு
(ஒவ்வொரு வினாவுக்கும் 2 புள்ளிகள் வீதம் மொத்தம் 20 புள்ளிகள்)

No comments:

Post a Comment