Accounting

Economics

Monday, May 10, 2010

Economics

பொருளியல்

ஆசிரியர் :- க.பிரபாகர் B.A Dip In Teach (Merit)

சென்மேரிஸ் மத்தியகல்லூரி., பொகவந்தலாவ.

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

நேரம்:- 1½ மணித்தியாலம்.


இடைவெளி நிரப்புக.


01. பொருளியலானது ஒரு சமூகத்திலுள்ள பலதுறை சார்ந்த தனிநபர்களினதும் நடத்தைகளைப் பற்றி ஆய்வு செய்வதனால் அதனை .............................................................. என அழைக்கின்றோம்.


02. ஒவ்வொரு சமூகமும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பிரதான காரணம் .................................................................. ஆகும்.


03. அமையச் செலவு தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் உற்பத்தி வளங்களின் ..................................................................................... ஆகும்.


04. வளங்கள் மாற்றுப்பயன்பாட்டைக் கொண்டிருக்காத போது அமையச்செலவானது ...................................................................................... ஆகும்.


05. ஆக்க இயல்தகவு எல்லை மீது அமைந்துள்ள புள்ளி குறிப்பது...................................... ஆகும்.


06. ஆக்க இயல்தகவு எல்லைக்கு இடதுபுறமாக அமைந்துள்ள புள்ளி குறிப்பது .................................................................... ஆகும்.


07. பொருளாதார செயற்பாடுகள் ஏற்ற இறக்கமின்றி சீராக இயங்குவது ....................................................................................எனப்படும்


08. வளங்களின் வினைதிறன் = ...............................................+..................................................


09. நாட்டின் மொத்த உற்பத்தியில் நீண்டகாலம் தொடர்ச்சியாக ஏற்படும் அதிகரிப்பு...................................................................... எனப்படும்.


10. மீண்டும் மீண்டும் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடியதாயுள்ள மூலதனச் சொத்தக்கள் .................................................................................... என அழைக்கப்படும்.


11. மொத்த முதலீட்டிலிருந்து பெறுமானத்தேய்வை கழித்துப்பெறுவது ..................................................................................... ஆகும்


12. இயற்கை வளங்கள் அனைத்தும் ................................. என்ற உற்பத்திக் காரணியில் அடங்கும்.


13. உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ..................................................................................... எனப்படும்.


14. குறிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் முடிவுப் பொருட்களாக மாற்றப்படாத நிலையிலுள்ள கையிருப்பு ..................................................................................... எனப்படும்.


15. உற்பத்திக் காரணிகளின் வினைதிறனை உயர்த்தும் விதத்தில் வளங்களை நெறிப்படுத்தும் கருமம் ..................................................................................... எனப்படும்.


16. குறிப்பிட்டளவு உள்ளீட்டினைக் கொண்டு பெறக்கூடிய வெளியீட்டினளவு அதிகரித்தல் .................................................................................... எனப்படும்.


17. முதனிலை ஆக்கக் காரணிகளாக ................................................................. இரண்டாம் நிலை ஆக்கக் காரணிகளாக ............................................................வும் காணப்படுகிறது.


18. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் ......................................................... ஆவார்.


19. தேசங்களின் செல்வம் என்ற நூலை எழுதியவர் ......................................................... ஆவார்.


20. பொருளியலில் பொருள்சார் கருத்தை முன்வைத்தவர் ................................................... ஆவார்.



சரியான விடையினைத் தெரிவு செய்க


21. மனித தேவைகளின் அடிப்படை அம்சங்களாக காணப்படுபவை
1 அத்தியாவசியமானவை , ஆடம்பரமானவை
2 பல்வகைப்பட்டவை தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்பவை
3 பூர்த்தி செய்யப்படக் கூடியவை,தொடர்ந்து வளர்ச்சியடையக் கூடியவை
4 வரையறுக்கப்பட்டவை, அத்தியாவசியமானவை
5 வரையறுக்கப்பட்டவை, பூர்த்தி செய்தவுடன் முடிந்து விடும்.

22. பின்வருவனவற்றுள் எவை பொருளியல் விடயப் பரப்புடன் நேரடியாகத்தொடர்பு படாதவை

1 பொருட்கள் சேவைகளை நுகர்வு செய்தல்
2 பொருட்கள் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய மனித தேவைகள்.
3 அன்பு, கருணை, சக்தி, பலம் போன்றவை.
4 ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் , அபிவிருத்தியும்.
5 வேலைவாய்ப்பு மட்டமும் , பொருளாதார உறுதிப்பாடும்.


23. அமையச் செலவு என்பது பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கும்
1 ஒரு பொருளைப் பெறுதல் பொருட்டு வேறு பொருட்களை தியாகம் செய்வது.
2 பல்வேறு நுகர்வுப் பொருட்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் போது ஏற்படும் செலவாகும்.
3 ஒரு பொருளைப் பெறுவதற்கு தியாகம் செய்யப்படும் ஏனைய பொருட்களின் செலவாகும்.
4 அருமையானதும் மாற்றுப்பயன்பாட்டைக் கொண்டதுமான வளங்களைக் கொண்ட ஒரு தேவையை பூர்த்தி செய்ய முற்படும் போது அதற்காக இழக்கப்படுகின்ற அடுத்த சிறந்த தேவையாகும்.
5 ஓரு நிறுவனத்தை அமைப்பதற்க ஏற்படும் செலவாகும்.

24. சந்தர்ப்ப செலவு பூச்சியமாக அமையக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்றாக கருதமுடியாதது.
1 வளங்களை பூரணமாக பயன்படுத்தாத போது
2 வளங்கள்; மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிராத போது.
3 வேலையின்மை நிலவும் போது
4 நிறைதொழில் மட்டம் நிலவும் போத.
5 வளங்கள் யாவும் ஒரே தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துவதாய் இருக்கும் போது

25. பின்வருவனவற்றுள் பொருளாதாரப் பொருளாக கருத முடியாதது.
1 குளத்திலிருந்து பெறப்படும் நீர்.
2 ஆடைகளை உலர்த்த பயன்படுத்தப்படும் சூரிய ஒளி
3 மின்விசிரியொன்றிலிருந்து பெறப்படும் காற்று.
4 அரசினால் வழங்கப்படும் இலவசக் குழாய் நீர்.
5 லொத்தர் பரிசாகக் கிடைத்த கார்.
சுருக்கமான விடை தருக
1 பொருளியலாளர்கள் எதற்காக வளங்கள் அருமையானவை எனக் கூறுகின்றனர்;?
2 அமையச் செலவு தோன்றுவதற்கான காரணங்கள் எவை?
3 உற்பத்திக் காரணி ஒன்றுக்கான கேள்வி வழிவந்த கேள்வி எனப்படுவதேன்?4 நிலம் என்பதை வரையறுத்து அதன் இயல்புகளைத் தருக?
5 இயற்கை வளங்கள் நிரம்பல் மாற்றமடைவதற்கான காரணங்கள் யாவை?
6 இயற்கை வளங்களின் பயன்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?7 ஊழியம், ஊழியநிரம்பல் வரையறுக்குக?
8 ஊழிய விநியோகத்தினை நிர்ணயிக்கம் காரணிகள் எவை?
9 தொழிற்படை என்றால் என்ன?
10 தொழிற்படையில் உள்ளடங்கும் பிரிவினர்களைக் கூறுக?
11 ஊழிய நகர்வு என்றால் என்ன? அதனை நிர்ணயிக்கும் காரணிகள் எவை?
12 ஊழிய வினைதிறன் என்றால் என்ன?
13 பணப்புழக்கமானது சிறப்புத் தேர்ச்சிக்கு வழிவகுத்தது இக் கூற்றை ஏற்பீரா? விளக்குக.
14 மூலதனம் என்பதை வரையறுக்குக? இதன் பண்புகள் 4 தருக?
15 சேமிப்பு - முதலீடு வரையறுக்குக.
16 முயற்சியான்மை - முகாமை வேறுபடுத்துக.
17 புதுப்பொருளாக்கம் (நவோற்பாதனம்) என்பதை விளக்கக?
18 பொருளாதார பொதுப்பணி மூலதனம் - சமூக பொதுப்பணி மூலதனம் வேறுபடுத்துக.
19 பொருளாதாரத்தில் மனித மூலதனத்தையும் பௌதீக மூலதனத்தையும் விருத்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வேறு வேறாகக் குறிப்பிடுக.
20 நியாயத்துவம் என்றால் என்ன? இதனை ஏற்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்ககைள் எவை?

1 comment:

  1. Thanks A lot Sir
    இவற்றுடன் விடைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete