பொருளியல்
நேரம் :- 2 மணித்தியாலம்
ஆசிரியர் :- க.பிரபாகர் B.A Dip In Teach (Merit)
சென்மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவ.
பகுதி - 1
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
01 வளத்திரட்சி என்பதில் உள்ளடக்கப்படுபவை
1. இயற்கையின் கொடைகள் அனைத்தும்
2. உற்பத்திக்காரணிச் சேவைகளின் அளவு
3. முயற்சியாண்மை மட்டும்.
4. உற்பத்திக் காரணிகளின் வினைதிறன்.
5. தொழிநுட்பம்.
02 போட்டிச்சந்தையில் வேறுபட்ட விலைகளில் குறித்த பண்டமொன்றின் தொகைகள் பற்றிய சில தரவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
1. விலை 3 6 9 12 15
2. வழங்கப்பட்ட தொகை 0 4 6 10 13
3. 3/= வரிக்குப்பின் வழங்கல் தொகை யாது? ---- --- ---- ----- ----
03 A,B ஆகியஇரு பொருட்களுக்கிடையிலான விலைசார்குறுக்குக்கேள்விநெகிழ்ச்சி –1 B பொருளுக்கான வருமானக்கேள்வி நெகிழ்ச்சி – 0.8
1. நுகர்வோர் வருமானம் 20% தால் அதிகரித்தால் B இன் கேள்வித்தொகை …………………………………………………………………………………………
2. A யின் விலை 20%தால் அதிகரித்தால் B இன் கேள்வித்தொகை ……………
04 இழிவுப்பண்டம் என வரைவிலக்கணப்படுத்தும் பொருள் ஒன்று கொண்டிருக்கவேண்டிய பண்புகளாக கருதப்படுபவை.
1. விலை அதிகரிக்கும்போது கேட்கப்படும் தொகை வீழ்ச்சியடைந்து செல்லல்
2. வருமானம் அதிகரிக்கும்போது கேள்வி வீழ்ச்சியடைந்து செல்லல்.
3. விலை மாற்றமடைந்தபோதும் கேட்கப்பட்டதொகை மாற்றமின்றி செல்லல்.
4. விலை அதிகரிக்கும்போது நுகர்வோர் வேறு பண்டங்களுக்கு மாறிச்செல்லல்
05 ஒரு பொருள் கேள்வி நெகிழ்ச்சியற்றது எனக் கருதிக்கொள்க இப்பொருளின் நிரம்பல் அதிகரிக்குமாயின் பின்வரும் விளைவுகளில் எவை ஏற்படும்.
1. சமநிலை விலை, தொகை குறைவடையும்.
2. உற்பத்தியாளனின் மொத்த வருமானம் குறைவடையும்
3. நுகர்வோரின் மொத்த செலவு குறைவடையும்.
4. சமநிலை விலை குறையும் சமநிலைத் தொகை அதிகரிக்கும்
06 பின்வருவனவற்றில் வெளிவாரி விளைவுகள் பற்றிய தவறான கூற்றுக்களைத் தெரிவு செய்க?
1. சந்தை விலைப்பொறிமுறையில் பிரதிபலிக்கப்படுபவை
2. உற்பத்தி சாத்தியவளையியைப்பயன்படுத்தி விளக்கக் கூடியவை
3. வெளிவாரி விளைவுகள் காரணமாக உற்பத்தியானது உத்தம மட்டத்தினை அடைவதில்லை.
4. சந்தைக்கேள்வி, சந்தைநிரம்பல் ஆகயிவற்றில் பிரதிபலிக்கப்படுபவை.
07 ஒரு உற்பத்தி நிறுவனத்தினது குறுங்கால செலவுகள் தொடர்பான சரியான கூற்றுக்களைத் தெரிவு செய்க.
1. சராசரி செலவானது தொடர்ந்து குறைவடைந்து செல்லும்
2. சராசரி மாறும் செலவானது ஆரம்பத்தில் குறைவடைந்து பின்னர் அதிகரித்துச்செல்லும்.
3. நிலையான செலவுகள் ஒரு எல்லைக்கு அப்பால் உயர்வடைந்து செல்லும்
4. சராசரி செலவுக்கோட்டின் அதிகுறைந்த புள்ளியை எல்லைச்செலவுக்;கோடு வெட்டிச் செல்வதாகக் காணப்படும்.
4. மொத்தசெலவுக்கோட்டுக்கும் மொத்த மாறும் செலவுக்கோட்டுக்கும் இடையேயான குத்தச்சு ரீதியான தூரம் சராசரி நிலையான செலவாகும்.
08 தவாறான கூற்றுக்களாக உம்மால் கருதப்படுபவற்றை தெரிவு செய்க.
1. சராசரி செலவுகளில் எப்பொழுதுமே ஓரளவு சாதாரணஇலாபம் அடங்கியுள்ளது
2. தனியுரிமை நிறுவனம் குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் நேர்கணிய இலாபத்தினையே உழைக்கும்.
3. நிறைபோட்டி நிறுவன கேள்விக்கோடே அதன் குறுங்கால நிரம்பல் கோடாகும்.
4. தனியுரிமைப்போட்டி நிறுவனங்கள் குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் சாதாரண இலாபத்தையே உழைக்க முடியும்.
5. தனியுரிமையில் நிரம்பல்கோடு இல்லை எனக் கூறப்படும்.
09 சந்தைத்தோல்வி ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிவு செய்க
1. மத்திய திட்டமிடல் முறையின் தோல்வி
2. அரச உற்பத்தி நிறுவனங்கள் திறமையற்ற முறையில் இயங்குதல்.
3. சந்தையில் போட்டித்தன்மை மறைந்து தனியுரிமைத்தன்மை தோன்றுதல்.
4. சந்தைகள் நீதித்தன்மையான வருமான பங்கீட்டினை உறுத்திப்படுத்தாமையினால் அதிகளவான வருமான ஏற்றத்தாழ்வுகளும் வருமானக் குவிவும் ஏற்படுதல்.
5. வெளிவாரி விளைவுகள் தொழிற்படுதல்.
10 பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கள் யாவை?
1. நேர் வெளிவாரி விளைவினால் சந்தைத்தோல்வி ஏற்படுவதைத் தடுக்க மானிய உதவிகளை வழங்குதல் வேண்டும்.
2. எதிர் வெளிவாரி விளைவினால் சந்தைத் தோல்வி ஏற்படுவதைத் தடுக்க வரிகளை விதித்தல் வேண்டும்.
3. எதிர் வெளிவாரி விளைவினால் சந்தைத் தோல்வி ஏற்படுவதைத் தடுக்க மானிய உதவிகளை வழங்குதல் வேண்டும்.
4. நேர் வெளிவாரி விளைவினால் சந்தைத்தோல்வி ஏற்படுவதைத் தடுக்க வரிகளை விதித்தல் வேண்டும்.
11 பின்வருவனவற்றுள் வெளிவாரி விளைவுகiளாகக் கருதப்படுபவை யாவை?
1. கடல் கொந்தளிப்பு காரணமாக கரையோரம் மண்ணரிப்புக்கு உள்ளாகுதல்.
2. புயல்காற்று, வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக விவசாயிகளின் பயிர்கள் நாசமடைதல்.
3. இரசாயனத் தொழிற்சாலையொன்று அதன் கழிவுகளை ஆற்றுக்குள் தள்ளுதல்.
4. இயற்கை காடொன்றினை வெட்டுவதனால் மரத்தளபாடங்கள் உற்பத்திசெய்யப்படுதல்.
5. வானொலி மூலமாக செய்திகளைக் கேட்டல்.
6. மக்கள் சுகாதார சேவைகளை நுகர்வதன் மூலம் நோயற்ற சமூகமொன்று உருவாகுதல்.
12 ஒரு நிறுவனம் சமநிலையடையும்போது
1. சராசரி வருமானமும் சராசரி செலவும் சமனாகக் காணப்படும்.
2. எல்லை வருமானமும் எல்லைச் செலவும் சமனாகக் காணப்படும்.
3. எல்லை வருமானமும் சராசரி செலவும் சமனாகக் காணப்படும்.
4. சராசரி வருமானமும் எல்லைச் செலவும் சமனாகக் காணப்படும்.
5. கேள்வித்தொகையும் நிரம்பல் தொகையும் சமனாகக் காணப்படுதல்.
13 தனியுரிமை நிறுவனம் தொடர்பாக பின்வருவனவற்றுள் பொருத்தமில்லாத கூற்றுக்ளக்கள் எவை?
1. சராசரி வருமானக்கோடும் எல்லைவருமானக்கோடும் ஒன்றாகக் காணப்படும்
2. கேள்விக்கோடும் எல்லை வருமானக்கோடும் ஒன்றாகக் காணப்படும்.
3. எல்லைவருமானம் சராசரி வருமானத்தைவிட கூடுதலாகக் காணப்படும்.
4. விலையும் சராசரிவருமானமும் சமனாகக் காணப்படும்.
5. எல்லை செலவுக்கோடும் நிரம்பல்கோடும் ஒன்றாகக் காணப்படும்.
14 பின்வருவனவற்றுள் பிழையான கூற்று எது?
1. உற்பத்திக் கோட்பாடானது உள்ளீட்டுக்கும் வெளியீட்டுக்கும் இடையேயான தொடர்பினைக் கூறுகின்றது.
2. செலவுக்கோட்பாடானது அமையச் செலவினை உள்ளடக்குகின்றது.
3. நிறைபோட்டி நிறுவனம் ஒன்றின் விலை, சராசரி வருமானம், எல்லை வருமானம், ஆகியவை யாவும் ஒன்றுக்கொன்று சமனாகக் காணப்படும்.
4. சிலருரிமை நிறுவனக் கேள்விக்கோடு முறிந்த கேள்விக்கோடாகக் காணப்படும்.
15 பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கள் எது
1. பொருளியல் செலவு எனும் எண்ணக்கருவானது அமையச்செலவினை உள்ளடக்குகின்றது.
2. ஏகபரிமான ஆக்க இயல்தகவு வளையி தோன்றுவதற்குக் காரணம் மாறாஅளவுத்திட்ட விளைவு விதி நீண்டகால உற்பத்திச் செயற்பாட்டில் தொழிற்படுவதாகும்.
3. குறுங்கால சராசரி செலவுக்கோடானது ரு வடிவம் கொண்டாகக் காணப்படும்.
4. நிறைபோட்டி நிறுவனம் ஒன்றின் குறுங்கால நிரம்பல்கோடு என்பது அதன் எல்லைச்செலவுக்கோட்டின் முழுப் பகுதியையும் குறித்து நிற்கும்.
16 குறுங்கால உற்பத்தி நடத்தை தொடர்பான பின்வரும் செலவுச்சமன்பாடுகளில் சரியானவை எவை?
I. TC = TVC + TFC
II. TFC = TC – TVC
III. AC = TFC + TVC
IV. AFC = TFC / Q
V. TC = TVC
17 நிறைபோட்டிச்சந்தையின் இயல்புகளாகக் காணப்படுபவை
1. ஏராளமான வழங்குனரும் ஏராளமான நுகர்வோரும் காணப்படுதல்.
2. நிறுவன கேள்விக்கோடு முற்றாக நெகிழ்ச்சியற்றதாகக் காணப்படுதல்.
3. விளம்பரம் மேற்கொள்ளப்படுவதில்லை.
4. பூரண பிரதியீடற்ற நெருங்கிய பிரதியீட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்.ஏ. நுழைவுச் சுதந்திரம் காணப்படுதல்.
5. நீண்டகாலத்திலும் மிகை இலாபத்தினை உழைக்கமுடிதல்.ஏஐஐ. நிறுவன கேள்விக்கோடு பூரண நெகிழ்ச்சியுடையதாகக் காணப்படுதல்.
18 தனியுரிமைச்சந்தையின் இயல்புகளாகக் காணப்படாதவை
1. ஒரேயொரு நிறுவனம் மட்டும் காணப்படுதல்
2. பூரண பதிலீட்டுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுதல்.
3. குறுங்காலத்திலும் நீண்டகாலத்திலும் அசாதாரண இலாபத்தை உழைத்தல்.
4. போட்டி விளம்பரங்கள் அதிகம் காணப்படுதல்.
5. விலையிலும் விற்பனைத் தொகையிலும் ஒரே நேரத்தில் செல்வாக்கு செலுத்தமுடிதல்.
6. பிரவேச சுதந்திரம் காணப்படுதல்.
7. விலையை அமைப்பவராகக் காணப்படுதல்.
19 தனியுரிமைப் போட்டிச்சந்தையின் இயல்புகளாக் காணப்படுபவை.
1. ஒரு சில நிறுவனங்கள் மட்டும் காணப்படும்.
2. விலை ஏற்போராகக் காணப்படுதல்.
3. நீண்டகாலத்தில் அசாதாரண இலாபம் பெற முடிதல்.
4. பிரவேச சுதந்திரம் காணப்படுதல்.
5. நிறைபோட்டியின் 25மூ இயல்பினையும் தனியுரிமையின் 75மூ இயல்பினையும் கொண்டிருத்தல்.
6. விலைப்போட்டி இடம்பெறல்.
7. கடுமையான போட்டி விளம்பரங்கள் இடம்பெறும்.
8. பெருமளவு நிறுவனங்கள் காணப்படுதல்.
20 பின்வருவனவற்றிற்கு ஒவ்வொரு உதாரணம் வீதம் தருக
1. உற்பத்தியில் நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள் -
2. நுகர்வில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் -
3. கலப்பு வெளிவாரி விளைவுகள் -
4. உற்பத்தியில் எதிரக்கணிய வெளிவாரி விளைவுகள் -
பகுதி - 2
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
01. ஒப்பீட்டு நன்மையான வெளிநாட்டு வர்த்தகத்தின்மூலம் ஒரு நாடு உற்பத்திசாத்திய எல்லைக்கு அப்பால் உள்ள பண்டச் சேர்க்கையை நுகரலாம் என்பதை விளக்குக?
02. வேலையின்மையானது அதிகரிக்கின்றது - இதனை உற்பத்திசாத்தியவளையியில் காட்டுக?
03. உருளைக்கிழங்கின் அறுவடை அதிகரித்தது ஆனால் விவாசயிகளின் வருமானம் முன்னரை விடக் குறைவடைந்தன.-இந்நிலமைக்காண காரணத்தை வரைபடத்தின் துணைகொண்டு விளக்குக?
04. சாதாரண கேள்விக்கோட்டின் வழியே விலைசார் கேள்வி நெகிழ்ச்சியானது பூச்சியத்திலிருந்து முடிவிலி வரை மாறலாம் என்பதை வரைபடம் மூலம் காட்டி விளக்குக?
05. தனியார் செலவு, வெளிவாரியான செலவு, சமூகச்செலவு என்பவற்றுக்கிடையே நீர் காணும் வேறுபாடுகள் யாவை?
06. வெளிவாரி விளைவுகள் காணப்படும்போது சந்தையில் உற்பத்தி பற்றிய தீர்மானம் உத்தமமாக அமைவதில்லை பொருத்தமான வரைபுகளின் உதவியுடன் விளக்குக?
07. சந்தைத்தோல்வியைச் சீர்செய்ய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் நடவடிக்கைகள் யாவை?
08. நிறைபோட்டி நிறுவனம் ஒன்று சாதாரண இலாபத்தை மாத்திரமே நீண்டகாலத்தில் உழைத்துக்கொள்ளமுடியும் எனக் கூறப்படுவது ஏன் ? வரைபு மூலம் விளக்குக?
09. பின்வரும் கூற்றுக்களை ஏற்பீரா? விளக்குக?ஐ. நிறைபோட்டி நிறுவனம் ஒன்றின் கேள்விக்கோடு முடிவில்லா நெகிழ்ச்சியுடையதுஐஐ. நிறைபோட்டி நிறுவனங்கள் விளம்பரங்களை அதிகமாக மேற்கொள்கின்றன.
10. நீண்டகால சராசரி செலவுக் கோட்டின் வடிவம் யாது ? அதற்குக் காரணம் என்ன?
வெளியீடு பூச்சியத்திலிருந்து ஒவ்வொரு அலகாக அதிகரித்துச்செல்லச்செல்ல எல்லைச்செலவானது முறையே 80, 06, 10, 50, 110, 200, 395 என மாற்றமடைந்து சென்றது (TFC= 100 ) எனின்
11. TFC, TVC, TC, AFC, AVC, AC, MC ஆகிய செலவுகளை உள்ளடக்கிய அட்டவணையினைத் தயாரிக்க.
12. சந்தையில் விலை 50 ரூபாவாயின் நிறுவனம் உழைக்கும் பொருளியல் இலாபம் யாது?
13. இந்த இலாபத்தை நிறுவனம் தொடர்ந்து உழைக்கமுடியுமா?காரணத்தை விளக்குக?
14. ஒரு நிறைபோட்டியாளன் ஏன் சந்தையில் விலை ஏற்போனாக (A Price Taker) உள்ளான் என்பதற்கான காரணங்களை விளக்குக. சந்தையில் அவன் எதிர்நோக்கும் கேள்வி வளையியின் வகையினைக் காட்டுக?
15. அளவுத்திட்ட விளைவு விதிகள் ஆக்க இயல்தகவு வளையிகளின் வடிவங்களைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதனை விளக்குக?
No comments:
Post a Comment