Accounting

Economics

Wednesday, May 12, 2010

வணிகக்கல்வி முன்னோடிப்பரீட்சை– 2010
சென்மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை
ஆசிரியர் க.பிரபாகர் B.A . Dip In Econ Dip In Teach(Merit)
நேரம் - 2 மணித்தியாலம்

முயற்சியாண்மை, வணிகமுகாமைத்துவம்பகுதி – I
எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

1. உள்ளீட்டிற்கும் வெளயீட்டிற்குமான தொடர்பினைக் காட்டுகின்ற பதம் குறிப்பது.
1. உற்பத்தித் திறன்
2. விளைத்திறன்
3. பயனுறுதி
4. எண்ணக்கருதிறன்
5. தொழிநுட்பதிறன்

2. பின்வருவனவற்றுள் எது ஒருகட்டுப்படுத்தலின் கட்டம் அன்று.
1) சாதனையை மதிப்பிடுவது
2) வித்தியாசங்களை இனங்காணுவது
3) மாற்று வழிகளை இனங்காண்பது
4) நியமங்களை அமைப்பது
5) திருத்துவதற்கான வழிகளை மேற்கொள்வதற்கு.

3. தலைமை வகித்தல் நடவடிக்கைகளை உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.
1) தலைமை/ திணைக்களப்படுத்துதல/ குறிக்கோள்களை உருவாக்குதல்
2) தூண்டுதல் / தலமை திணைக்களம்
3) குறிக்கோள்களை உருவாக்குதல் / மாற்று வழிகளை மதிப்பிடுதல் /தலைமை
4) சாதனை மதிப்பீடு தூண்டுதல் கையளிப்பு
5) தொடர்பாடல் /தூண்டுதல் /தலைமை

4. திட்டமிடல் ஒன்று வெற்றியடைய வேண்டுமாயின் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகளில் ஒன்று அல்லாதது எது?
1) தெளிவான நோக்கம்
2) எல்லாமட்ட ஊழியர்களும் பங்குபற்றுதல்.
3) நெகிழ்வுத் தன்மை
4) அதிகாரத்திற்கு சமபொறுப்பு வழங்குதல்
5) எழுத்துருவான திட்டம் காணப்படல்.

5. ஒழுங்கமைத்தல் தத்துவங்கள் அல்லாத.
1) கட்டளைச் சங்கிலி
2) கட்டளையின் ஓரினத்தன்மை
3) விசால அளவு
4) தொழிற்பிரிப்பு
5) காரணிகள் சார்ந்த நியமங்களை ஒழுங்கமைத்தல்.

6. கட்டுப்படுத்தலின் நோக்கம்
1) விலகல்களை இனங்கண்டு இலாபகரத்தன்மையை உறுதிப்படுத்தல்.
2) விலகல்களை இனங்கண்டு செயற்பாடுகளை மீள் திட்டமிடல்
3) ஊழியர் செயற்றிறனை மதிப்பிட்டு அவர்களுக்கு பயிற்சியளித்தல்.
4) திட்டங்கள் பெறுபேறுகளுடன் இணங்கியமைவதை உறுதிப்படுத்தல்
5) பெறுபேறுகள் ஆனவை திட்டங்களுடன் இணங்கியமைவதை உறுதிப்படுத்தல்.

இடைவெளி நிரப்புக
7. ஊழியர்கள் எண்ணிக்கை 25க்கு குறைவாக காணப்படும்போது அது சிறிய நடுத்தர நிறுவனம் என கூறப்படும். இதனைக் கூறிய நிறுவனம்……………………………………………………. .

8. “வணிகமொன்றின் இடரை எடுகோளாகக் கொண்டு அந்த வணிகத்தினை ஒழுங்குபடுத்தி அதனை முகாமை செய்யும் நபர் முயற்சியாளராவார்.” என முயற்சியாண்மைக்கு வரைவிலக்கணம் கூறியது …………………………………………… ஆகும்.

9. Hendry Mintzrberg நிகழ்த்தப்பட்ட ஆய்வின் படி முகாமையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய பத்துக் கருமங்கள் பிரதானமான மூன்று தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தலைப்புக்கலானவை
1. ……………………………………………………………………………………
2. ……………………………………………………………………………………
3. ……………………………………………………………………………………

10. நீண்டகாலத்தில் அடைய எதிர்பார்க்கும் விடயங்கள் அடங்கிய பொழிப்பாக்கப்பட்ட கூற்று ……………………………………… நோக்கமாகும்.
நீர் விரும்பிய 14 வினாக்களுக்கு மாத்திரம் விடை தருக.

01. முயற்சியாண்மையின் முக்கியத்துவங்கள் ஐந்து தருக.
02. முயற்சியாண்மை ஒன்று வெற்றிகரமாக அமைவதற்கு இன்றியமையாத 5 காரணிகளைக் குறிப்பிடுக.
03. சிறிய வணிகங்களை ஆரம்பிப்பது முயற்சியாளர்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கின்றது.
04. முன்னோக்கிய கட்டுப்பாடு, பின்னூட்டல் கட்டுப்பாடு ஆகிய முறைகளை விளக்குக.
05. சிற்றளவு வணிகம், பேரளவு வணிகம் என வகைப்படுத்துவதன் முக்கியத்துவம் 5தருக.
06. முகாமையின் அடிப்படை செயற்பாடுகளை பெயரிட்டு அவற்றை சுருக்கமாக விளக்குக.
07. பின்வருவன பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
I . மையப்படுத்தலும் - பன்முகப்படுத்தலும்
II. கட்டுப்பாட்டுத் துணை / விசாலம்
08. ஒழுங்கமைத்தல் தொழிற்பாட்டின் பிரதான கருமங்கள் 4 எழுதுக.
09. ஒத்த தொழில்கள் பேரளவு வியாபாரங்கள் இருந்த போதிலும் சிறு வணிகங்கள் எவ்வாறு வெற்றிகரமாக இயங்குகின்றன?
10. சிறு வணிகம் என்பதனைச் சுருக்கமாக விளக்குக. இவ்வாறான வணிகங்களின் முக்கிய இலட்சணங்கள் யாவை?
11. முகாமைத்துவத்தின் இயல்புகள் ஐந்து தருக?
12. முகாமையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் 5 தருக?
13. திட்டமும் - திட்டமிடலும் வேறுபடுத்துக.
14. ஒழுங்கமைத்தலின் படிமுறைகளைத் தருக?
15. அமைப்பு வரைபடம் மூலம் கிடைக்கும் பயன்கள் 5 தருக?
16. ஜப்பானிய 5’S முறையினை விளக்குக.
17. முகாமைத்துவ கட்டுப்பாட்டு முறைகள் யாவை?
18. முகாமையாளர் - தலைவர் இரண்டினதும் தொடர்பையும் வேறுபாட்டையும் தருக?

2 comments:

  1. Wynn Macau, Wynn Macau and more casinos may close due to COVID-19
    A map showing Wynn 성남 출장샵 Macau, Wynn Macau and 나주 출장샵 Wynn Macau, 광명 출장안마 along with other nearby casinos and other 양산 출장안마 gaming facilities, 의정부 출장샵 for real

    ReplyDelete